கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சில நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும் இதுவரை அறிமுகம் செய்யவில்லை.
இப்படியான நிலையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதாவது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பான தகவல்களை திருடுவதற்காக ரஷ்யா மற்றும் வட கொரிய ஹேக்கர்கள் முனைப்புக்காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இந்த எச்சரிக்கையை மைக்ரேசொப்ட் நிறுவனம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.