இலங்கைக் கொடி ஏற்றப்பட்ட மரக் கப்பல் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓமான் தலைநகரான மஸ்கட்டில் அல் அதாய்பாவில் கரையொதுங்கி உள்ளதாக மஸ்கட் கடல்சார் பாதுகாப்பு மையத்திற்கு ஒரு அறிக்கை கிடைத்தது.
இந்த கப்பலில் இதர பொருட்கள் மற்றும் எண்ணெய் ஏற்றப்பட்டு இருந்ததாகவும், 6 பணியாளர்களை இந்த கப்பல் ஏற்றிச் சென்றதாக ஓமான் ஒப்சர்வர் தெரிவித்துள்ளது.
அறிக்கையைப் பெற்ற பிறகு, கடல்சார் பாதுகாப்பு மையம் (எம்.எஸ்.சி) ஒரு கூட்டத்தை நடத்தியது, அதில் இராணுவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்,
கூட்டு தேசிய நடவடிக்கை முறைக்கு ஏற்ப நிலைமையைக் கையாள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மற்றும் கடலுக்கு செல்வோர் அருகிலுள்ள கடல் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பெட்ரோலிய மாசுபாடு அல்லது கசிவைத் தவிர்ப்பதற்கும் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வழிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கப்பலில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர், அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என்று Oman Observer தெரிவித்துள்ளது.