நாட்டின் பிரதான பிரச்சினைக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித தீர்வுத் திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பிரதான பிரச்சினை கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டம் வேறு ஓர் உலகத்திலிருந்து தயாரிக்கப்பட்டதாகவே தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர் வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.