உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டி என்ற முகவரியை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (23) என்ற பல்கலைகழக மருத்துவபீட 3ஆம் வருட மாணவன் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கடந்த ஒரு வருடமாக கோண்டாவில் வன்னியசிங்கம் வீதியில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று, அங்கு தங்கியிருந்து படித்து வந்த நிலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில்,
பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி மயூரன் அறிக்கையில் கழுத்தில் கயிறு இறுக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்ப்பட்டே இறப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததை அடுத்து சடலத்தில் இருந்து இரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதுமே இறப்புத் தொடர்பில் சரியான தீர்மானத்திற்கு வரமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து மாணவரின் சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு,சடலம் துன்னாலை, வல்லிபுர இந்து மயானத்தில் சட்டமுறைக்கு அமைய புதைக்கப்பட்டது.
அவரது நிகழ்வில் யாழ் பல்கலைக்கழ மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ், விரிவுரையாளர்கள், பல்கலை மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர்.