கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொன்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதுடன் ஸ்ரீலங்கா கடற்படையின் ரோந்து கப்பலில் இருந்து வீசப்பட்ட கற்கள்பட்டதில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை ராமேஸ்வரம் பகுதியிலிருந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட விசைபடகுகளில், மீனவர்கள் மீன்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவுப் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட இலங்கை ரோந்துக்கப்பல்கள் இரவு பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டதால் மீனவர்கள் அச்சத்தால் மீன்பிடிக்க முடியாமல் அவதியுற்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் போது அங்கு வந்த ஸ்ரீலங்கா கடற்படையினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி படகை நிறுத்தச் சொல்லி 50 க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி வலைகளை கடலில் வெட்டி விட்டு இப்பகுதியில் நின்றால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்து விரட்டியடித்துள்ளனர்.
இதில் தங்கச்சிமடத்ததை சேர்ந்த ஜேசுராஜா என்பருக்கு சொந்தமான படகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை வீரர்கள் கற்களை கொண்டு வீசியதில் விசைப்படகில் இருந்த ஜேசுராஜா என்பவருக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட்டதுடன் படகும் சேதமடைந்துள்ளது.
இதனால் அப்குதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் அச்சமடைந்து மீன் பிடிக்காமல் கரை திரும்பினர். இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை நஷ்டத்துடன் ஏற்பட்டதுடன் கரை திரும்பியுள்ளனர்.