உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமிழில் சாட்சியமளித்தார். தமிழில் சாட்சியமளிக்க அவர் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.
ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக நேற்று சாட்சியமளிக்க ஆரம்பித்தபோது, தனது தாய் மொழியான தமிழ் மொழியில் சாட்சியம் அளிக்கும் வண்ணம் தனக்கு மொழி பெயர்ப்பு வசதிகளை செய்து தருமாறு ரிஷாத் பதியுதீன் ஆணைக் குழுவில் தனது சட்டத்தரணி ஊடாகவும், தனிப்பட்ட ரீதியிலும் கோரிக்கை முன்வைத்தார்.
தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் நேற்று ஆணைக் குழுவில் சேவையில் இருக்காத நிலையில், அவரை சிங்கள மொழியில் சாட்சியமளிக்கும்படி ஆணைக்குழு கேட்டது. அவர் ஏற்கனவே ஒருமுறை சாட்சியமளித்தபோதும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் சிங்கள மொழியில் சரளமாக சாட்சியமளித்ததாக ஆணைக்குழு குறிப்பிட்டது.
எனினும், தனது தாய் மொழி தமிழ் என்ற ரீதியிலும் அம்மொழி அரசியலமைப்பின் அடிப்படையில் அரச கரும் அமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதற்கு அமைவாகவும், தனக்கு தமிழில் சாட்சியமலிக்க வசதிகளைச் செய்துதருமாரு கோரினார்.
இறுதியில் அதற்கான ஏற்பாடுகளை சில மணி நேரங்கள் சாட்சிப் பதிவை ஒத்தி வைத்து ஜனாதிபதி ஆணைக் குழு ஏற்படுத்திக் கொடுத்தது.
எவ்வாறாயினும் , அதன் பின்னர், மொழி பெயர்ப்பாளர் மொழி பெயர்ப்பின் போது விட்ட தவறுகளை திருத்தி இடைக்கிடையே ரிஷாத் பதியுதீன் சிங்கள மொழியில் சாட்சியம் அளித்தார்.


















