பாரவூர்தி மீது கார் ஒன்று மோதிய விபத்துக்குள்ளாகியதில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் மணிக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரயாகராஜ்-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் திடீரென காரும் பாரவூர்தியும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் இந்த அனர்ந்தம் ஏற்பட்டுள்ளது.
இதில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் கார் நொறுங்கியுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்த பொரிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயர் அதிகாரிகளை அந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


















