திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து வயோதிபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தம்பலகாமம் – கோயிலடி பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி கருணாகரன் (60 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளிப்பதற்காக சென்றவர் வீட்டுக்கு வரவில்லை என்று தேடிய போது அவர் கிணற்றில் விழுந்த நிலையில் கிடப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அயலவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதைடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


















