கல்முனை தமிழ் பிரதேச விவகாரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இன்று வரையிலும் தரம் உயர்த்தப்படாமல் இருக்கின்றது. மூவின மக்களும் வாழ்கின்ற பிரதேசமாக அந்த பகுதி காணப்பட்டுகின்றது.
எனினும், இந்த பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற விடயத்தில் கூடுதலான அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன. இது கவலைக்குறிய ஒரு விடயம் என அவர் மேலும் கூறியுள்ளார்.


















