கடந்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அங்குள்ள வாக்குகளை சிதைத்து, தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்படுவதை இல்லாமல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“கல்முனை பிரதேச செயலகம் காணி மற்றும் நிதி அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக மாற்றியமைக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களால் இது குறித்து வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் கல்முனை பிரதேச செயலகம் காணி மற்றும் நிதி அதிகாரம் கொண்ட ஒரு முழுமையான பிரதேச செயலகமாக மாற்றியமைக்க வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.