கொழும்பு நகரத்தின் பல பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொது மக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்படவில்லை என்றால் தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களினதும், முதியவர்களினதும் மரணங்களை தடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்ணான்டோ எச்சரித்துள்ளார்.