கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
வடக்கு கொழும்பிலுள்ள மாடி வீடுகள் மற்றும் அருகில் வாழும் மக்கள் பயன்படுத்தும் பொது கழிப்பறைகள், குளிக்கும் இடங்களில் தண்ணீர் குழாய்களை பயன்படுத்தல் காரணமாக கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் காரணமாக நேற்று வரையில் 15324 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 12265 பேர் பேலியகொட மீன் சந்தை மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள். அவர்களில் அதிகமானோர் கொழும்பு வடக்கு பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.
கொழும்பு வடக்கு பிரதேசமான மோதரை, கொட்டாஞ்சேனை, தெமட்டகொட பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும். கொழும்பு வடக்கு பிரதேசத்தின் மக்கள் தொகை ஒரு லட்சத்து 31ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
கொரோனா தொற்றாளர்களில் 388 பேர் மட்டக்குளியிலும், 327 பேர் மோதரையிலும், 288 பேர் தெமட்டகொடயிலும், 204 பேர் வனாத்தமுல்ல பிரதேசத்திலும் 230 கொம்பனிதெருவிலும், 255 பேர் ஜிந்துபிட்டியிலும், 295 பேர் கொட்டாஞ்சேனையிலும், 205 பேர் புளுமெண்டலிலும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.