கொரோனா தொற்றுறுதியான நிலையில் IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளை தனது ஆண் குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண்ணை தேடும் பணிகள் தொடர்கின்றன.
27 வயதான குறித்த பெண் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தமது குழந்தையுடன் IDH மருத்துவனையில் இருந்து தப்பிச் சென்றார்.
இதனையடுத்து அந்த குழந்தை மாத்திரம் எஹலியகொடை பகுதியில் உள்ள குறித்தப் பெண்ணின் வீட்டில் வைத்து நேற்று காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டது.
குறித்த பெண், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது IDH இல் அனுமதிக்கப்பட்டிருந்தார்.