பூநகரி பிரதேச சபையில் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கிடையில்
நிலவி நிர்வாக ரீதியாக முரண்பாடுகளை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்
சி. சிறிதரனால் மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவை நியமிக்க அவருக்கு அதிகாரமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சனால், பாராளுமன்ற உறுப்பினருக்கு எழுதிய பதில் கடிதத்தில் இதனை
குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரால் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.
குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன்,
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசவாளர் க.சுரேன் ஆகியோர் அடங்கிய குழு
நியமிக்கப்பட்டிருந்தது. இக் குழுவினரும் பூநகரி பிரதேச சபையின் நிர்வாக
விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பித்திருந்தனர். எனவே இது தொடர்பில்
வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் 29.10.2020 திகதி கடிதத்தில்
பின்வருமாறு குறிப்பிட்டு்ளளார்
கௌரவ ஆளுநருக்கும் ஏனையோருக்கும் பிரதியிடப்பட்ட தங்களின்
MP/JF/KN/Si.Sh/CLG-NP2020 ஆம் இலக்க 2020.10.17 ஆம் திகதிய கடிதம்
சார்பாக தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டவாறு பூநகரி பிரதேசசபையின்
நிர்வாக ரீதியான முரண்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான குழுவொன்றை தாங்கள் நியமிப்பதற்கு ஏற்பாடுகள் எவையும் காணப்படவில்லை என்பதையும், தங்களால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு பூநகரி பிரதேசசபையின் அலுவலகத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கோ நிர்வாக விடயங்களை கையாள்வதற்கோ அதிகாரம் இல்லை என்பதையும் தயவுடன் அறியத்தருகின்றேன்.
எவ்வாறெனினும் தங்களால் குறிப்பிடப்பட்ட நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பாக
என்னால் கவனத்தில் கொள்ளப்படும் என்பதையும் தயவுடன் அறியத்தருகின்றேன்
என குறித்த பதில் கடிதத்தில குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறிதரனினால் நியமிக்கப்பட்ட குழுவினர் மூவரும் சிறிதரனின் தீவிர விசுவாசிகள் ஆவர். அதனால், சிறிதரன் தரப்பு தொடர்புடைய விவகாரத்தில் அவர்கள் நேர்மையுடன் அறிக்கை சமர்ப்பித்திருக்க வாய்ப்பில்லையென்றும் கருதப்படுகிறது.