பேலியகொடை – நீர்கொழும்பு வீதியில் நவலோக சுற்றுவட்டத்திற்கு அருகில் 10 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் 70 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மற்றையவரிடம் இருந்து 5 கிராம் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முதலில் கைது செய்யப்பட்ட பெண், மட்டக்குளி – சமிட்புர பகுதியை சேர்;ந்தவருடன் ஏனைய இருவரும் கந்தானை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.