ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
கொழும்பு தனியார் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேல், நேற்று முன்தினம் (20) இரவு திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரின் பூதவுடல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்போது உயிரிழந்த ஊடகவியலாளருக்கு கொவிட் தொற்று கிடையாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.