கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து இன்று (நவம்பர் 22) வரை கொழும்பு மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதேவேளை, நேற்றும்,இன்றும் மாத்திரம் 500 இற்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், மூன்றாவது அலைமூலம் கம்பஹா மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 650 இற்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையை அடுத்து இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 62 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.