திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்சார நிலைய வீதியில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதுடன், சம்பவத்தால் முச்சக்கரவண்டி சாரதிக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திருகோணமலை, அரசடி சந்தியை சேர்ந்த டி.சுரேஷ் (44 வயது) என்பவருக்கே இவ்வாறு நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளதுடன் அவர் தற்போது விபத்து சேவை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் முறிந்த மரத்தை அகற்றும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து பொலிஸாரும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.