மொனராகலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொனராகலை- தணமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவ குடாவோயா பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதலின் போதே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதுடன், அதில் ஒருவருக்கு பொல்லால் தாக்கியுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்ற நிலையில் தணமல்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அத்தோடு படுகாயமடைந்திருந்த நபரை, பொலிஸ் நடமாடும் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் தணமல்வில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவரை அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றியபோது அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் தணமல்வில பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,அவர்களை கைது செய்யும் முஅற்சியில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


















