சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கைதடி பகுதியில் நள்ளிரவு வேளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வான் ஒன்றில் சுற்றிய ஆறு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 12.30 மணியளவில் கைதடி பாலத்திற்கு அருகாமையில் வைத்தே குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.