மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பால்காமம் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம் பெற்றுள்ளது.
34 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வலிப்பு நோய் காரணமாக ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம் ஆற்றிலே உள்ளதாகவும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹிக்கடுவ – தொடகமுவ பகுதியில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இன்று மாலை உயிரிழந்துள்ளனர்.
ஹிக்கடுவ-தொடகமுவ பாலத்திற்கு அருகாமையில் உள்ள குளத்தில் நீராடுவதற்காக சென்ற போது இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 7 மற்றும் 8 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.