கிழக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.அ.லதாகரன் தெரிவித்துள்ளார் .
அக்கரைப்பற்றில் 10 பேருக்கும் சாய்ந்தமருது பகுதியில் ஒருவருமாக 11பேர் கல்முனை பிராந்திய சுகாதார பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,
மேலும் காத்தான்குடியில் 02 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளான மாணவி ஒருவர் பாடசாலைக்கு வருகை தந்துள்ளதால் காத்தான்குடி பதுரியா பாடசாலை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.