இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றா ளர்களாக அடையாளம் காணப்பட்ட 502 பேரில் 262 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.
அதன்படி அலுத்கடையில் 78 பேர் , கம்பஹா மாவட்டத் தில் 23 பேர் , கண்டி மாவட்டத்தில் 16 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அலுத்கடை பகுதியில் 42 பேர் மற்றும் கொழும்பு மட்டக் குளி பகுதியில் 42 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
கம்பஹா மாவட்டத்தில் 90 பேர், களுத்துறை மாவட்டத் தில் 46 பேர் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 15 பேர் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 08 பேர், கேகாலை மாவட்டத் தில் 07 பேர், பதுளை மாவட்டத்தில் 06பேர் மற்றும் கிளி நொச்சி மாவட்டத்தில் 05 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 03 பேர், குருநாகல் மாவட்டத் தில் ஒருவர், காலி மாவட்டத்தில் ஒருவர், மாத்தரை மாவட்டத்தில் ஒருவர், மேலும் 55 பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.