கொழும்பின் துறைமுகத்தில் சுமார் 20ஆயிரம் கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகாரசபையின் தலைவர் தயா ரட்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக புதிய கொள்கலன்களை கையகப்படுத்துவதில் சிரமம் எதிர்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழமையாக நாளொன்றுக்கு கொழும்பு துறைமுகத்தில் 800 – 1000 வரையிலான ஏற்றுமதி கொள்கலன்கள் பரிமாற்றம் இடம்பெறும். எனினும் தற்போது அது 500 என்ற அளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது.
இதன்காரணமாக கொழும்புக்கு வரவேண்டிய கப்பல்கள் இந்தியா, பங்களாதேஸ் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களை நோக்கி செல்வதாக துறைமுக அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் 14 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேர அடிப்படையிலேயே பணியாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்படுகின்றனர். இவையே கொழும்பு துறைமுகத்தின் ஸ்தம்பித நிலைக்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.