நாட்டில் நேற்று 496 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 23,000ஐ கடந்தது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 496 பேரும் மினுவாங்கொட- பேலியகொட இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புடையவவர்கள். இந்த கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,946 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 23,484 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டின் 56 சிகிச்சை மையங்களில் 6,366 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்று சந்தேகத்தில் 498 நபர்களை மருத்துவமனைகள் கண்காணித்து வருகின்றன.


















