இலங்கையில் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன்மூலம் உயிரிழப்பு 118 ஆக உயர்ந்தது.
72 வயதுடைய ஒரு ஆணும், 81 வயதுடைய ஒரு பெண்ணும் மரணத்தனர்.
அதன்படி, கலஹாவைச் சேர்ந்த 72 வயது ஆண் ஒருவர் வாகனத்தில் சென்றபோது நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். பெரதேனியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனாவால் உயிரிழந்தது தெரிய வந்தது.
அட்டலுகமவில் வசிக்கும் 81 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் மரணித்தார். கோவிட் -19 நோய்த்தொற்றால் நீரிழிவு நோய் அதிகரித்து மரணம் சம்பவித்தது.


















