மகர சிறைச்சாலை கலவரத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கலவரத்தில் எட்டு கைதிகள் உயிரிழந்திருந்தனர்.
இரண்டு சிறை அதிகாரிகளும் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து காயமடைந்தவர்களில் 10 கைதிகள் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், 15 கைதிகள் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


















