கொரோனா தொற்றால் கண்டி மாவட்டத்தில் உயிரிழந்த முதலாவது நபரின் உடலை உறவினர்கள் பொறுப்பேற்க மறுத்துள்ளனர். அவரது உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, சடலத்தை பொறுப்பேற்காமல் அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
கொலன்னாவவிலிருந்து கலஹவுக்கு தனியார் வாகனத்தில் பயணித்தபோது உடல்நலக்குறைவு காரணமாக பெரதெனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 49 வயது நபர் உயிரிழந்திருந்தார்.
பி.சி.ஆர் சோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது நேற்று (30) உறுதியானது.
அந்த நபர் செப்டம்பர் 26 ஆம் திகதி தனது மனைவியுடன் கொலன்னாவவில் உள்ள தனது மகளின் வீட்டிற்குச் சென்றிருந்தார். போக்குவரத்து தடைகளை நீக்கிய பின்னர், அவர்கள் 27 ஆம் திகதி தனியார் வாகனத்தில் வீடு திரும்பும் போது நோய்வாய்ப்பட்டு பெரதெனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இறந்தவர் கலஹ பகுதியில் வசிப்பவர். கொரோனா மரணம் காரணமாக உடலை தகனம் செய்ய இந்த நபரின் உடலை தயார் செய்து, சவப்பெட்டி மற்றும் சுகாதார கட்டணங்களை செலுத்துமாறு குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும், உடலை தகனம் செய்ய குடும்பத்தினர் மறுத்தனர். இதனால் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து, மரணச்சான்றிதழையும் பெற்றுக்கொள்ளாமல், உடலையும் வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு குடும்பத்தினர் வெளியேறி சென்று விட்டனர்.
இதேபோன்ற நிலைமை கொழும்பிலும் பதிவாகியுள்ளது. தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து குடும்ப உறுப்பினர்கள் சவப்பெட்டிகளிற்கு பணம் செலுத்த மறுத்துள்ளனர். கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் சடலத்தில் ஐந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டனல் இவ்வாறு சில சடலங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


















