மன்னார் மாவட்டத்தில் கிறிஸ்தவ மதமாற்றத்திலிருந்து இந்துக்களை பாதுகாக்க விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது சிவசேனை அமைப்பு. மன்னாரில் சைவ சமயம் ஆபத்திலுள்ள பகுதிகளிற்கு நேரில் செல்லும் அந்த அமைப்பின் தலைவர் மறவனபுலவு க.சச்சிதானந்தன், ஒவ்வொரு வீட்டிலும் நந்திக் கொடி ஏற்றி வருகிறார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட குறிப்பில்,இந்து மனம் பலவீனமாக இருப்பதால் இந்து சமூக பணி பலவீனமாக உள்ளதாகவும், அவர்களை பலப்படுத்த நடவடிக்கையெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மன்னாரில் சைவ மககள் மட்டும்தான் வாழ்ந்தனர். இன்று மாவட்டத்தில் சிறுபான்மையினராக மாறிவிட்டனர். கடந்த நான்கு ஆண்டுகளில், கிறிஸ்தவ மதமாற்றத்தை தடுக்க தன்னார்வலர்களை நியமிக்கும் பணியை நான் ஏற்றுக்கொண்டேன். ஆப்ராமிஸ்டுகள் என்னை முடக்க முயற்சிக்கிறார்கள்.

மிஷனரி நடவடிக்கைகளைத் தடுப்பதில் வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரிவில் நாம் வெற்றி பெற்றோம். ஒவ்வொரு சைவர்களின் வீட்டிற்கும் சென்று, ஒவ்வொரு வீட்டிலும் நந்திக் கொடிகளை நாட்டினோம். சுவரொட்டி பிரச்சாரத்தையும் மேற்கொண்டோம்.
செட்டிக்குள முறையை மன்னாரிலும் செயற்படுத்துகிறோம்.
மன்னார் மற்றும் அதன் புனிதமான சைவ வரலாறு குறித்த 864 பக்க புத்தகத்தை தொகுத்தேன். ஒரு கோவிலில் பூஜை செய்யும் முறைள், இந்த பூஜைகளில் ஓத வேண்டிய பொருத்தமான பாடல்களை புத்தகத்தில் இணைத்துள்ளேன்.

மன்னாரில் பதிவு செய்யப்பட்ட 92 ஆலயங்களை விட, 424 ஆலயங்களின் பட்டியலை தொகுத்தேன்.
சைவ கொடிகளை ஏந்தியபடி சை தொண்டர்கள் மன்னாரின் ஒவ்வொரு வீடுகளிற்கும் வருகிறார்கள்.

நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் முசலியின் புதுக்குடியிருப்பில் 62 சைவ குடும்பங்கள், கொக்குப்படையனில் 45 சைவ குடும்பங்கள், மருதமடுவில் 17 சைவ குடும்பங்கள், பொற்கேணியில் 7 சைவ குடும்பங்கள், மன்னார் நகரில் நாகதாழ்வில் 67 சைவ குடும்பங்கள் மற்றும் மன்னார் நகரம் சின்னகடையி்ல் 83 சைவ குடும்பங்கள் வீடுகளிற்குசென்று நந்திக்கொடிகளை வழங்கியதுடன், சைவ வரலாற்று புத்தகத்தையும் வழங்கினோம் என தெரிவித்துள்ளார்.


















