புத்தளம் – நாத்தண்டிய பிரதேசத்திலுள்ள கடலுணவு சார்ந்த தொழிற்சாலையொன்றின் 56 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் 300 பேர்வரை உள்ள நிலையில் அவர்களில் பலரது பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இதுவரை வெளியாகவில்லை என கூறப்படுகின்றது.
இதன் காரணமாக அவர்கள் அனைவரும் தொழிற்சாலையிலேயே தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் சுகாதார சேவைகள் பணியகம் தெரிவிக்கின்றது.
இதேவேளை கொரோனா இரண்டாம் அலையின் மற்றுமொரு கொத்தனியாக நாத்தண்டிய கடலுணவு தொழிற்சாலை மாறலாம் என்கிற அச்சமும் அங்கு ஏற்பட்டுள்ளது.


















