முல்லைத்தீவிற்கு தெற்கே 35 கிலோமீற்றர் தெற்கில் புயல் நிலப்பகுதிக்குள் நகர்வதாக யாழ் பல்கலைகழக புவியியல் துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகிய புரேவி புயலின் வெளிவலய எல்லை இன்று மாலை 6.00 மணியளவில் முல்லைத்தீவு நகருக்கு தெற்கே 35 கி.மீ. தூரத்தில் நிலப்பகுதிக்குள் நகர்கின்றது.
எனவே கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கும். இப்போது கிடைத்து வரும் கனமழை நீடிக்கும்.


















