ஜேர்மனியின் மேற்கு நகரமான ட்ரையரின் நடைபாதையில் வேகமாக பயணித்த காரொன்று பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் ஒன்பது மாத குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திய 51 வயதான சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர் பயணித்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒன்பது மாதக் குழந்தையும், 25, 52 மற்றும் 73 வயதுடைய மூன்று பெண்களும், 45 வயதுடைய ஆணும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேநேரம் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் விபத்தினை ஏற்படுத்தியபோது கணிசமான அளவு மது அருந்தியிருந்ததாகவும், சம்வத்தின் பின்னணியில் இஸ்லாமிய போராளிகளின் நோக்கம் எதுவும் இல்லை என்றும் சட்டத்தரணி பீட்டர் ஃபிரிட்ஸன் ஒரு செய்தியலாளர் சந்திப்பின்போது உறுதிப்படுத்தியுள்ளார்.



















