இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச கொரோனா தொற்றாளர்கள் நேற்று (2) பதிவாகினர். மொத்தம் 878 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,410 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் நெருங்கிய தொடர்புகள்.
நேற்று இரண்டு கொரோனா மரணங்களும் பதிவாகின. மொத்த மரணங்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.
தற்போது, 6,982 நோயாளிகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18,304 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும், 467 பேர் வைரஸ் பாதிப்புக்குள்ளான சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதற்கிடையில், அவிசாவளை சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆறு தொழிற்சாலைகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 97ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.



















