கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனம் காணப்பட்டதை அடுத்து இலங்கையில் மேலும் இரண்டு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி கினிக்கத்தேனை – பிளக்வோட்டர் தோட்டம் மேல் பிரிவு மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தடுகெளே தோட்டம் கீழ் பிரிவு ஆகிய பகுதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் 21 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



















