சரத்பொன்சேகா என்னை பற்றி நேற்று சபையில் நானில்லாத வேளையில், பேசியுள்ளார் என்பது என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மரங்கொத்தி, மரம் மரமாக கொத்தி விட்டு, கடைசியில் வாழை மரத்துக்கு கொத்தி மாட்டிக்கொள்ளுமாம். அதுபோல், இவர் என்னிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.
நான் அரசியல் “பொடியன்” அல்ல, அவரைவிட “சீனியர்” என்ற அடிப்படையில், அவருக்கு உரிய பதிலை நான் வழங்குவேன்.
‘சிங்கள பெளத்த வாக்குகள் எமக்கு தேவை, ஆனால் தமிழ், முஸ்லிம் வாக்குகளை இழந்து, இனவாதம் பேசி பெற முடியாது’ என சிங்கள மொழியில், அவருக்கு புரியும் முகமாக இரண்டொரு தினங்களில் நான் பகிரங்கமாக கொடுப்பேன். என்றார்.