மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி சுகாதார பிரிவைச் சேர்ந்த பொதுமகன் ஒருவருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
குறித்த நபர் கொழும்புக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையையடுத்து அருக்கு கொரோனோ தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துச் செல்வதையிட்டு மக்களிடையே பீதி நிலவி வருகின்றமை அவதானிக்க முடிகின்றது எனவும் சமூசேவையாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.