கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருந்த மேல்மாகாணத்தின் சில பகுதிகள் விடுவிப்பது தொடர்பி-ல் இன்று இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக முடக்கப்பட்டிருந்த பகுதிகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது குறைந்துள்ளதுடன் முடக்கப்படாத பகுதிகளில் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றமையினால் தனிமைப்படுத்தல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.