ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாரவில, தொடுவெவ பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 100 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.