முகக் கவசம் அணியாதவர்களுக்கு சுவிஸ் காவல்துறையினர் இப்போது சம்பவயிடத்திலேயே அபராதம் விதிக்கலாம்
சுவிட்சர்லாந்தில் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டத்தின் மூலம் நாட்டில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் தேசிய கவுன்சில், கொரோனா ஒழுங்குமுறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
மாற்றங்களின் விளைவாக, காவல்துறையினர் இப்போது சம்பவயிடத்திலேயே அபராதம் விதிக்க முடியும்.
பொதுக் கூட்டங்களின் வரம்புகளை மீறும் மற்றும் சமூக இடைவெளி விதிகளுக்கு இணங்காத நபர்கள் இப்போது சட்ட அமலாக்க அதிகாரிகளால் சம்பவயிடத்திலேயே அபராதம் விதிக்கப்படலாம்.
முன்னதாக, காவல்துறையினர் விதிகளை மீறுபவர்களுக்கு டிக்கெட்டுகளை வழங்குவார்கள், பின்னர் அது பொறுப்பான ஆளுநருக்கு அனுப்பப்படும்.
அபராதம் எவ்வளவு, அது உண்மையில் விதிக்கப்படுமா என்பதை ஆளுநர் தான் தீர்மானிப்பார்கள்.
இப்போது, விதிகளை மீறுபவர்களுக்கு சம்பவயிடத்திலேயே காவல்துறையினர் அபராதம் விதிக்கலாம்.
வேண்டுமென்றே மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 10,000 பிராங்க அபராதம் மற்றும் அலட்சியம் காரணமாக மீறுபவர்களுக்கு 5,000 பிராங்க அபராதம் விதிக்கப்பட்டும். இந்த அபராதங்கள் பொதுவாக கொரோனா வைரஸ் நடவடிக்கைகளுக்கு முரணாக செயல்படும் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகின்றன..
தனிப்பட்ட முறையில் முகக் கவசம் விதிகளை மீறுபவர்களுக்கு 300 பிராங்க அபராதம் விதிக்கப்படும்.