கம்பளை வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து,வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வைத்தியசாலையில் இருந்த கர்ப்பிணித் தாய்மார்கள் பேராதனை மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, கம்பளை வைத்தயசாலை பணிப்பாளர் வைத்தியர் சமில் விஜயகோன் தெரிவித்துள்ளார்.
கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளானார். இதையடுத்து, அவரது கணவரான கம்பளை வைத்தியசாலையில் உள்ளக பயிற்சியில் ஈடுபட்டு வந்த வைத்தியர் பிசிஆர் சோதனைக்குள்ளானார்.
அவருக்கு தொற்று உறுதியானது.
அவர் பயிற்சியை முடித்து கம்பளை வைத்தியசாலையை விட்டு வெளியேற தயாரான சமயத்திலேயே தொற்று அடையாளம் காணப்பட்டது. அவருக்கு பிரியாவிடை நிகழ்வு வைத்தியசாலையிலும், கம்பளையிலுள்ள தனியார் வைத்தியசாலையிலும் நடைபெற்றுள்ளது.
அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு, 6,9ஆம் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.



















