பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உட்பட பலர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த காரணமாக நேற்று (08) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் கலந்துகொள்ளவில்லை.
இதில் பொலிஸ்மா அதிபரின் சாரதிக்கு கொரோனா தொற்றிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸ் தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் மூன்றாவது மாடிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிற பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம், பொலிஸ் தலைமையகத்தை முற்றிலுமாக கிருமி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



















