கம்பளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
அண்மையில் குறித்த வைத்தியர் இடமாற்றம் பெற்றுச் செல்வதனை முன்னிட்டு அவருக்கு ஒரு விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதில் கலந்து கொண்ட கம்பளை வைத்தியசாலையில் 65 சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
வைத்தியர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே இவருக்கு மேற்கொண்ட சோதனையின்போது கொரோனா தொற்று தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக கம்பளை வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அதேபோல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப் பெண்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.



















