பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையிலான 26 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றில் 10 மோட்டார் சைக்கிள்களின் chassis இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதிப்பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை மொரட்டுவையில் நடந்த கோர விபத்தைத் தொடர்ந்து சாலை விதிமுறைகளை மீறும் மோட்டார் சைக்கிள்களைக் கண்டறிவதற்காக சிறப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.
இதனடிப்படையில் 26 மோட்டார் சைக்கிள்கள் ஞாயிற்றுக்கிழமை மிரிஹானா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இதில் 4 மோட்டார் சைக்கிள்கள் மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்கள் குழுவால் பரிசோதிக்கப்பட்டு சேஸ் எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக பிரதிப்பொரிஸ்மா அதிபர் கூறினார்.
மேலும் ஒழுங்குபடுத்தப்படாத மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை கைது செய்வதற்காக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை மொரட்டுவையில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இரு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித்தாயின் வயிற்றிலிருந்த குழந்தை உட்பட மூன்று உயிர்கள் பறிபோயிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















