COVID-19 காரணமாக மக்களை வீடுகளிலும், தொடர்மாடி குடியிருப்புக்களிலும் நீண்டகாலமாக தனிமைப்படுத்தியிருக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் கவனம் செலுத்தியுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இது தொடர்பாக கூறுகையில்,
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைத்து குடும்பங்களையும் சோதிக்கும் ஒரு புதிய மூலோபாயத்தின் மூலம் நீண்டகால தனிமைப்படுத்தும் செயல்முறையை எளிதாக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தனர்.
மேலும் வளாகங்களை தனிமைப்படுத்துவது தொடர்பான புதிய மூலோபாயத்தில் பி.சி.ஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகள் நடத்தப்படும்.
கொழும்பு நகரசபை பகுதிகளுக்குள் COVID-19 இன் பரவலானது ஒக்டோபர் 21 க்குப் பிறகு ஒப்பீட்டளவில் குறைந்துவிட்டதாக COVID பணிக்குழு சுட்டிக்காட்டியது.
அதிக ஆபத்து மண்டலங்கள் உட்பட மேற்கொள்ளப்பட்ட அனைத்து பி.சி.ஆர் சோதனைகள் மூலம் இவை நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நீண்டகாலமாக தனிமைப்படுத்தியிருக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் கோவிட் 19 க்கு சிகிச்சையளிப்பதற்கான உள்நாட்டு மருந்துகள் குறித்தும் இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.