மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, நாடாளுமன்றில் வைத்து நீங்கள் நடிகர் ரஜினிகாந்தை போன்றவரா என நாடாளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.
15000 மீனவர்களுக்கு நலன்களை வழங்குவதற்கு அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா என அவர், அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு பதிலளித்த போது அமைச்சர் டக்ளஸ் “நான் சொல்வதை செய்வேன், செய்வதையே சொல்வேன். தீரா பிரச்சினைகளாக வைத்திருக்க நான் எதைனயும் அணுகுவதில்லை. மேலதிகமாக நிதியைப் பெற்று மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்” என பதிலளித்திருந்தார்.
“நீங்கள் மிக அழகாக ரஜனி காந்தைப் போன்று சொல்வதைச் செய்வேன், செய்வதைச் சொல்வேன் என கூறுகின்றீர்கள், நன்றி, அவ்வாறு நடந்தால் சந்தோசம்” என சாணக்கியன் இதற்கு பதிலளித்திருந்தார்.