நிகவரெட்டியா, தும்புல்ல மகா வித்தியாலயம் இன்று மூடப்பட்டது. கொரோனா தொற்றிற்குள்ளான ஒரு பொலிஸ் அதிகாரியின் நண்பர், அந்த பாடசாலையில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிவதையடுத்து இன்று (10) பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
கொழும்பில் பணிபுரிந்து விடுமுறையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உறுதியானதாக நிகவரெட்டியா சுகாதார அலுவலர் கூறினார்.
பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தரின் நண்பரான ஒருவர் பாடசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணிபுரிகிறார்.
அவர் ஆசிரியர்களின் ஓய்வு அறையில் தங்கியிருந்ததாகவும், 434 மாணவர்கள் மற்றும் 31 ஆசிரியர்கள், ஊழியர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது.
இன்று காலை பாடசாலைக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.



















