சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் டாவிட் மலன் 915 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
பாகிஸ்தானின் பாபர் அசாம் 871 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.
இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் 816 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தை பிடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 4வது இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் ரசி வான் டிர் டுசன் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இப்பட்டியலில் ஆறாவது இடத்தில் நியூசிலாந்தின் கோலின் முன்ரோவும், ஏழாவது இடத்தில் கிளம் மேக்ஸ்வெல்லும் உள்ளனர்.
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இப்பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளார்.
அதே போல அப்கானிஸ்தானின் அஸ்ரதுல்லா 9வது இடத்திலும், இங்கிலாந்தின் இயன் மோர்கன் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.




















