கொவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை உயர்ந்தால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என கொவிட் செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
கூடுதலான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு உத்தேசிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் கொவிட் பரம்பலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 10 அம்ச வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் தரப்பினர் பிறப்பித்துள்ள வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகைக் காலத்தில் நிலைமைகளை கண்காணித்து அதற்கு ஏற்ற வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதியளவில் மேலும் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகியிருந்தால் அல்லது நோய்த் தொற்று பரம்பல் தீவிரமடைந்தால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.




















