காலி கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் 18ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென்மாகாண ஆளுநர் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காலி மாவட்டத்தின் வெலிகம உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவருகின்ற நிலையில் பாடசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















