போலி முகப்புத்தகத்தில் தன் மீது அவதூறு பரப்பிய இளைஞன் மீது, வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார் யுவதியொருவர்.யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிலகாலம் காதலித்த நிலையில் இளைஞனின் நடத்தையில் அதிருப்தியடைந்து யுவதி பிரிந்து சென்றுள்ளார். இதன்பின் கடந்த சில வாரங்களாக போலி முகநூல்களில் யுவதியின் மார்பிங் செய்யப்பட்ட படங்களும், அவதூறுகளும் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது நண்பியொருவருடன் முன்னாள் காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார். போனதும், வீட்டிலிருந்த தும்புத்தடியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
திடீர் கூச்சலால் அயலில் உள்ளவர்கள் அங்கு கூடியதையடுத்து பரபரப்பான நிலைமையேற்பட்டது.
இளைஞனின் சகோதரன் திருமணமாகி பிற இடமொன்றில் வசிப்பதுடன், அரச உத்தியோகத்தராக இருக்கிறார். அவர் தாயார் வீட்டுக்கு வந்த போது அசம்பாவித்தை கண்டு நிலவரத்தை சமாளித்துள்ளார்.
முகநூலில் அவதூறு பரப்புவது குற்றமென்பதை சகோதரன் குறிப்பிட்டதுடன், அப்படி செய்யாவிட்டால் வீடு புகுந்து தாக்கிய யுவதிகள் மீது பொலிஸ் முறைப்பாடு செய்யலாமென சகோதரனை அழைத்தார். அல்லது, யுவதிகள் குறிப்பிடுவதை போல முகநூலில் அவதூறு பரப்பியிருந்தார் தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க வலியுறுத்தனார்.
இதற்குள் யுவதியின் உறவினர்கள் சிலரும் அங்கு கூடிவிட நிலவரம் பதற்றமானது.
இதையடுத்து இளைஞன் தானே அவதூறு பரப்பியதாக குறிப்பிட்டு யுவதிகளிடம் மன்னிப்பு கேட்டார்.
இதையடுத்து இரு தரப்பு பெரியவர்களும் இணைந்து நிலைமையை சுமுகமாக்கினர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்ற முகநூல் பக்கமொன்றில் பதிவேற்றப்பட்டு, பின்னர் அந்த கணக்கு செயலிழந்திருந்தது.